Manapparai
Manaparai
Tourism | Municipality | Events | Education | Consumer Council | About us | Gallery | Feedback

Historical Details

Historical Temples

Telephones

City Info

Train Timings

Important Address

Features

Fun & Entertainment New


Home



குளித்தலை தாலுகாவிலிருந்து 1968ஆம் ஆண்டு மணப்பாறை தாலுகா உதயமானது. மணப்பாறை தாலுகாவில் ஏழு உள் வட்டங்களும் 96 வருவாய் கிராமங்களும் 88 ஊராட்சிகளில் 89 கிராம நிர்வாக அலுவலர்களும் 3,31,255 மக்கள் தொகையும் 99,020.00.0 ஹெக்டேர் நிலப்பரப்ளவும் அதில்  6,447.86.0 ஹெக்டேர் நன்செய நிலமும் 65,124.59.5 ஹெக்டேர் புன்செய் நிலமும் 536.36.0 ஹெக்டேர் நத்தம் நிலமும் 26,911.18.5 ஹெக்டேர் புறம்போக்கும் கொண்ட மிகப்பெரிய வருவாய் வட்டமாக உள்ளது.

இத்தாலுகாவின் பிரதான தொழில் விவசாயம். விவசாயத்திற்குத் தேவையான நீர் நிலத்தடி நீர், குளத்து நீர், சிறிய அணைக்கட்டு ஒன்று மூலமே கிடைக்கிறது.

தொழில் என எடுத்துக்கொண்டால் மூன்று பஞ்சாலைகள் உள்ளன மற்றும் ஒரு நெசவு ஆலை உள்ளது. மணப்பாறை குளித்தலை தாலுகாவில் இருந்தபோது மணப்பாறை தொகுதியாக மூன்று சட்ட மன்ற தேர்தல்களை சந்தித்துள்ளது. 1952ம் ஆண்டு அந்தோனிபீட்டரும் 1957 மற்றும் 1962 இரு தேர்தல்களில் சின்னையாக்கவுண்டர் அவர்களும் வெற்றி பெற்றுள்ளனர். 1967 முதல் மணப்பாறை தாலுகா இரண்டு சட்ட மன்ற தொகுதிகளாக பிரிக்கப்பட்டது. அதில்  குளித்தலை சட்ட மன்றத்தில் நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகள் அங்கம் வகித்தன. 1967 மற்றும் 1972 இருமுறை ஆளுங்கட்சியான தி.மு.க.வின் சாரிபில் கந்தசாமியும் 1977 ல் அ.தி.மு.க. ஆளும் கட்சியின் ஆதரவு பெற்ற காங்கிரஸ் சீனிவாசனும் 1980ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆளுங்கட்சியின் முசிறிப்பித்தனும் 1984ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆளும் கட்சியின் ஆதரவு பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்.கருப்பையாவும் 1989ல் எதிர்க்கட்சி வரிசையில் பாப்பாசுந்தரமும் 1991ல் அ.தி.மு.க. ஆளுங்கட்சி அமைச்சராக பாப்பாசுந்தரமும் 1996ல் தி.மு.க. ஆளுங்கட்சி ரெ.செல்வமும் 2001ல் அ.தி.மு.க. ஆளுங்கட்சி மீண்டும் பாப்பாசுந்தரமும் 2006ல் தி.மு.க. ஆளுங்கட்சி மாணிக்கமும் 2011ல் ஏழு மணப்பாறை ஒன்றிய ஊராட்சிகளை உள்ளடக்கிய ஸ்ரீரங்கம் தொகுதியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் வெற்று பெற்றுள்ளனர். மணப்பாறை தாலுகாவில் எஞ்சியுள்ள பகுதிகளைக்கொண்ட மருங்காபுரி தொகுதியில் 1967ஆம் ஆண்டு எதிர்க்கட்சி வரிசையில் கே.கே.முத்தையாவும், 1972ல் காங்கிரஸ் கட்சி இளஞ்செழியனும் 1977 மற்றும் 1980ல், ஆளுங்கட்சி அ.தி.மு.க. ராஜ்குமாரும் 1984ல் ஆளுங்கட்சி அ.தி.மு.க. சோலைராசும் 1989ல் எதிர்க்கட்சி வரிசையில் பேராசிரியர் பொன்னுச்சாமியும் 1991ல் சபநாயகராக அமைச்சராக பேராசிரியர் பொன்னுச்சாமியும் 1996ல் ஆளுங்கட்சி தி.மு.க. அமைச்சராக புலவர் செங்குட்டுவனும் 2001ல் ஆளுங்கட்சி அ.தி.மு.க. செல்லையாவும், 2006ல் எதிர்க்கட்சி வரிசையில் சின்னச்சாமியும் 2011ல் மணப்பாறை தொகுதியாக மாற்றப்பட்டு அதில் ஏழு ஊராட்சிகள் நீங்கலாக எஞ்சிய அனைத்துப்பகுதிக்கும் சட்டமன்ற உறுப்பினராக ஆளும் கட்சியைச் சேர்ந்த சந்திர சேகரும் வெற்றி பெற்றுள்ளார்.

Copyright 2010. Comtech Spreading Technology. All Rights Reserved